திங்கள், 13 ஜனவரி, 2014

வீரம் - எல்லையில்லா வன்முறை

வீரம் திரைப்படம் அப்படியிருக்கு, இப்படியிருக்கு என்று ஆளாளுக்கு இணையத்தில் எழுதினார்கள்..
ஆனால் அப்படி எதுவுமே இல்லை.. ஏமாற்றமே மிஞ்சியது.



அஜித்:
வெள்ளையும் சொள்ளையுமா பக்கா கிராமத்துக்காரராக வரார்.
ஆனால் வசன உச்சரிப்புகள் கிராமத்துக்காரர் போல இல்லை.
முதல்முறையாக படம் முழுக்க கிராமத்துக் கதாபாத்திரத்தில் வருகிறார்.
மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
வசனங்கள் ஒவ்வொன்றும்  அனல் பறக்கிறது.
சின்ன உதாரணம்: "சோறு போட்டவங்க எல்லாம் அம்மா, சொல்லிக் கொடுத்தவன் எல்லாம் அப்பா". 
ஆனால் தமன்னாவுடன் ரொமான்ஸ் பாடல் காட்சிகளில் மனுசனை பார்க்க முடியல.. வயது முதிர்ச்சி தெரிகிறது.
சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை இனி வரும் படங்களில் தவிர்த்து விடலாம்.
சண்டைக் காட்சிகளில் நாயடி, பேயடி அடிக்கிறார். அதிக ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
அந்த தொடர்வண்டி காட்சியில் நான் பயந்து போய்விட்டேன். (இந்த உச்சகட்ட ரிஸ்க் தவிர்க்கப்பட வேண்டும்)

தம்பிகள்:
தம்பிகள் நால்வரும் தம்பிகளாகவே வாழ்கிறார்கள்.
சந்தானத்துடன் சேர்ந்து அவ்வப்போது அடிக்கும் லூட்டிகளை ரசிக்கலாம்.
சென்டிமென்ட் காட்சிகளில் நல்லா நடித்திருக்கிறார்கள்.

தமன்னா:
படம் முழுக்க குடும்ப குத்துவிளக்காக வருகிறார்.
ஆனால் பாடல் காட்சிகளில் ஆடைக்கு தட்டுப்பாடு.

இயக்குனர் சிவா :
'நீ தேவன்னா நான் தேவன். நீ நாடார்னா நான் நாடார்...' என்று சாதி சமத்துவம் பேச முயற்சித்திருக்கிறார்.
அவருடைய பார்வையில் தயாரிப்பாளர் ரெட்டியாக தெரிந்திருக்கிறார் போல..
அதை விட்டுத் தொலையுங்க..
இன்னும் கோடரி தூக்கிட்டு அலையுற வில்லன்கள் எங்கே இருக்கிறார்கள்??
சண்டைக் காட்சிகளில் ஆந்திரா மசாலாவை அதிகமாக சேர்த்திருக்கிறார்.
பாடல் காட்சிகள் எடுக்கப் போகிறோம் என்று வெளிநாட்டிற்கு சென்று தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்..

சந்தானம்:
டபுள் மீனிங் இல்லாமல் ஒற்றை வரி வசனங்கள். இவர்தான் படத்தின் ப்ளஸ்.

அப்புக்குட்டி:
கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்..
அஜித்தின்  காலில் விழும் காட்சியில்  கண்கலங்க செய்துவிட்டார்.

தம்பி ராமையா:
நேஷனல் விருது பெற்ற திறமையான நடிகர் இந்த மாதிரியான சில்லறை கதாபாத்திரங்களை ஏற்று பெயரைக் கெடுத்துக் கொள்ள கூடாது

இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்:
இவரை தமிழ் சினிமா புறக்கணிப்பது நலம்.

ஒளிப்பதிவாளர் வெற்றி:
காட்சிகளை அருமையாக படம் பிடித்திருக்கிறார்.
இரண்டு ரொமான்ஸ் பாடல்களில் லொகேஷன் அருமையா இருக்கு (ஆனால் அஜித்-தமன்னா ரொமான்ஸை பார்க்க முடியலையே!!)

நடன இயக்குனர் யாருன்னு தெரியல.. அஜித்துக்கு நடனம் வராது..அதுக்காக இப்படியா!!!

கல்லூரிக்கு  தீ வைப்பது, குழந்தை கழுத்தில் அரிவாள் வைப்பது,
சிறைக்குள் இருப்பவன் ரவுடியிசம் செய்வது,
சம்பந்தமே இல்லாமல் காரை வெடிக்க செய்து பறக்க வைப்பது என படம் முழுக்க எல்லையில்லா  வன்முறை.

திரைக்கதை வேகமாக நகர்வதால் இறுதிவரை தியேட்டருக்குள் இருக்க முடிகிறது.

அஜித்துக்கு முற்றிலும் மாறுபட்ட திரைப்படம்.
தமிழ் திரையுலகிற்கு மற்றுமொரு படம்.

6 கருத்துகள்:

  1. அண்ணே..நீ அரசியல் போராளினு ஊருக்கே தெரியும்..ஆனா சினிமா போராளின்னு இபோதான் தெரிஞ்சுகிட்டேன்..

    இனிமே படமே நான் பாக்க வேணாம்//உன் விமர்சனமே போதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போராளியா??? வெளங்கிடும் :)

      சும்மா ஒரு பொழுதுபோக்குதான்.. இதுதான் முதன்முறையாக எழுதுற சினிமா விமர்சனம்...

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. முதல் சினிமா விமர்சனமே பட்டைய கிளப்புது....
    இவ்வளவு நாள் எங்க அண்ணேன் இருந்தீங்க....
    சீக்கிரம் வாங்க....சமுதாயத்தை சீரழிக்கும் இந்த சினிமாக்களை சீரழிப்போம்

    பதிலளிநீக்கு
  4. ஏதோ துணிச்சலில் வீரத்துக்கு போய் விட்டீர்கள் .. ஆனால் இதே போல் ஜில்லாவுக்கு போய் விடாதீர்கள் .
    அப்புறம் உங்களுக்கு அம்புலன்ஸ் அனுப்பி வைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு