வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழினவாதம் தொடர்பான கட்டுரைக்கு இந்தியவாத மகஇகவுக்கு பதில்

வினவு இணையதளம் தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள் என்னும் தலைப்பில் ஒரு நேர்காணல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளிகளை தமிழகத்தை விட்டு வெளியேற தமிழினவாதிகள் சொல்வதாக கட்டுரை உள்ளது. (யார் அந்த தமிழினவாதிகள் என்று இறுதிவரைக்கும் கட்டுரையில் சொல்லவில்லை.)

இந்திய ரயில்வேயில் தமிழர்க்கு சம உரிமை இல்லை.
இந்திய பணி தேர்வுகளில் தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இந்தி ஆதிக்கம் அதிகம்  உள்ளது. இந்தி அல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
அதைப் பெற்றி நாம் பேசினால் 'தமிழினவாதமாம்'.
வெளிமாநில தொழிலாளிடம் சென்று சிண்டு முடியும் வேலை செய்யும் இவர்கள் செய்வது புரட்சியாம்.

அவர்களின் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு:

வினவுக்கு புத்தி பேதலித்து விட்டதா??
வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது.
வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று வினவிடம் சொன்னது யார்?
தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்??
ஏன் இந்த சிண்டு முடியும் வேலை??

வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.
அதில் என்ன தவறு?
பல நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே!!

குறைந்த கூலிக்கு அழைத்துவரும் நபர்களை சென்று நேர்காணல் எடுக்கலாமே!
அவர்கள்தானே தமிழனையும், வெளிமாநில நண்பர்களையும் சுரண்டுகிறார்கள்.
அது குறித்த விழிப்புணர்வை வெளியாட்களுக்கு ஊட்டலாமே!
அவர்கள் கையிலும் சிவப்புக் கோடியைக் கொடுக்கலாமே!
அதை விடுத்து ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.
அவர்களின் குடும்பம், குழந்தைகளின் படிப்பு எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது..
அவர்கள் தங்கள் ஊரிலேயே நிம்மதியா வாழ்வு வாழ வழிவகை செய்யல்லாமே!
வெளிமாநில நபர்கள் இங்கே வர என்ன காரணம்? அம்மாநிலங்களில் நிலவும் வறுமைதானே!
அதனை நீக்க என்ன வழி சொல்கிறீர்??
வெளிமாநிலங்களில் உள்ள சிவப்புக்கொடி ஆட்கள் என்ன செய்கிறார்கள்?
இல்லாத இந்தியாவுக்கான புரட்சிக்கு ஆள் சேர்க்கிறார்களா??

அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?

சீனாவில் வெளியாட்கள் வேலை பார்க்க அடையாள அட்டை வேண்டும்.
அதுவும் நிரந்தர வேலை கிடையாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லி உங்க சீனா பொதுவுடைமைவாதிகளிடம் சொல்லுங்க..

அது என்ன மாயமோ, மர்மமோ தெரியல.
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டால் வினவுக்கு வயித்தெரிச்சல்!!
ஒருவேளை இறுதிவரைக்கும் சாதி, மத சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது வெளியாட்களுக்கு புரியும்.
ஆனால் இதுபோன்ற சிண்டு முடியும் வேலையை வினவு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

3 கருத்துகள்:

  1. சரியான பதிலடி. இதை அப்படியே அங்கேயும் பதிவு செய்து விடுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சுப்பர் கட்டுரை , வினவுக்கு மண்டை கழண்டுவிட்டதோ என்னவோ.. தமிழன் தமிழனக்குத்தான் குழிப்பறிப்பான் சரியான உதாரணம் வினவின் கட்டுரை

    பதிலளிநீக்கு
  3. . வினவு ரசிகரான தங்களுக்கு அந்தக் கட்டுரையை பற்றி எதிர் கருத்து இருந்தால்...அதை பதிவு செய்வதற்கு பதிலாக...புரட்சி என்றால் என்னவென்று தெரியாமல் எதற்க்கெடுத்தாலும் புரட்சியை பற்றி இழுப்பது சுத்த கோமாளித்தனமாக இல்லையா..உங்களுக்கு.???

    பதிலளிநீக்கு